பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.