news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 5 மாதங்களாக அங்கன்வாடியில் சிரமப்பட்ட குழந்தைகள்
tv

Also Watch

tv

Read this

5 மாதங்களாக அங்கன்வாடியில் சிரமப்பட்ட குழந்தைகள்

புத்தேரி, காஞ்சிபுரம்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Anganwadi

அங்கன்வாடியில் சிரமப்பட்ட குழந்தைகள் :

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த அங்கன்வாடி கட்டிடமானது புதிதாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15,50,000 ரூபாய் மதிப்பீட்டீல் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த நிலையில் திறப்பு விழா கண்ட அங்கன்வாடி மைய கட்டிடம் ஆனது பயன்பாட்டிற்கு வந்த நிலையில் இக்கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் அம்மையத்தில் டியூப் லைட்,மின்விசிறி உள்ளிட்டவைகள் இருந்தும் மின் இணைப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதோடு.

கல்வி கற்க வரும் குழந்தைகள் உரிய வெளிச்சமின்றி கல்வி கற்க முடியாமலும்,பிற்பகல் சத்துணவு வழங்கப்பட்டு குழந்தைகள் உறங்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டு கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.மேலும் அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படாமல் குழந்தைகளுக்கு சத்துணவு சமைப்பதற்காக வெளியே இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுவதும்.

அக்கட்டிடத்திலேயே கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாமல் பூட்டப்பட்டும் இருந்து வந்ததால் குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் வீட்டிற்கும் சென்று மீண்டும் மையத்திற்கு திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் நமது நியூஸ் தமிழ் குழுவுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்று கள ஆய்வு செய்து இது குறித்து செய்திகள் சேகரித்து கடந்த வாரம் பிரத்யேகமாக செய்தி வெளியான நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அங்கன்வாடி மையத்திற்கு எதிரே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து குழந்தைகளின் நலன் கருதி தற்காலிக மின் இணைப்பை கொடுத்திருக்கிறது.

அதே போல் தண்ணீர் வசதி ஏற்படுத்தும் வகையில் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இணைப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா அவர்கள் அங்கன்வாடி
மையத்திற்கு நிரத்திர மின் இணைப்பு அளித்திட உத்தரவிட்டதன் விளைவாக அங்கன்வாடி மையத்திற்கு தற்போது நிரந்தரமான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின் இணைப்பின்றி சிரமப்பட்டு வந்த குழந்தைகளும்,அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு செய்தி வெளியிட்ட நியூஸ் தமிழுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும். தெரிவித்தனர்.

Related Link
வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையோரம் தீ விபத்து

வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையோரம் தீ விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
9 hrs 42 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved