news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நேற்று கைது, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நேற்று கைது, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் போராட்டம்

கருப்பு நிற ஆடையணிந்து...

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு நிற உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில்...
நாடாளுமன்றத்துக்கு இன்று ஜூலை 22ஆம் தேதி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 20ஆம் தேதியன்று, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மாணவர்களுக்கு எதிரான வன்முறையாக வெடித்தது.

போராட்ட களத்தில் ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் இல்லத்தின் முன், நேற்று ஜூலை 21ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்துவந்தனர்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது;
இந்தியாவில், கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 14 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அதானி, அம்பானியின் கடன் தள்ளுபடி 16 லட்சம் கோடி ரூபாய். மாணவர்கள் போராட்டத்துக்கு உண்மையான காரணம் உள்ளது, மாணவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு என்பது தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளது. அமைதியான போராட்டத்தில் எவ்வித ஜனநாயக மீறலும் இல்லை. ஆனால், மாணவர்கள் மீதான வன்முறை நியாயமல்ல. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டது.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Related Link
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியினர் 3ஆவது நாளாக கடும் அமளி

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியினர் 3ஆவது நாளாக கடும் அமளி

           

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல்காந்தி கைது, முதலமைச்சர் விஜய் கண்டனம்

4
8 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau