Also Watch
Read this
By: Fyrose Banu

டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 7ஆம் தேதியை துவங்கிவிட்டாலும், ஆஸ்திரேலிய அணிக்கு மட்டும் முதல் போட்டி, 11ஆம் தேதிதான் நடைபெற்றது. இப்போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக 67 ரன்கள் வித்தாயசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு, 13ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் படுமோசமாக சொதப்பி, இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி
இலங்கை, கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 169/2 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில், பிரையன் பென்னட் 56 பந்தில் 64 ரன்களை குவித்தார். இதன தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், மேட் ரென்ஷா 65 (44) ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் டிராவிஸ் ஹெட் 17 (15), மேக்ஸ்வெல் 31 (32) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை சேர்த்தனர். மற்றவர்கள் சரியாக ஆடாததால், ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்கள் முடிவில் 146/10 ரன்களை மட்டும் சேர்த்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 
ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவு
இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே பெரிய அணியாக இருக்கிறது. மற்றவை இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள்தான். இந்நிலையில் ஜிம்பாப்வே, அயர்லாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி, மழை காரணமாக ரத்தாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி, லீக் சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் மோதும் இந்தியா, ஜிம்பாப்வே
டி20 உலக கோப்பையின் நடைபெற இருந்த ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டதால், ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் காரணமாக டி20 உலக கோப்பை லீக் போட்டி தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறியது. பிப்ரவரி 26ஆம் தேதி சூப்பர் 8 சுற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved