news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news "தங்கள் தவறை மறைக்க இபிஎஸ் மீது பழி"
tv

Also Watch

tv

Read this

"தங்கள் தவறை மறைக்க இபிஎஸ் மீது பழி"

இபிஎஸ்க்கு ஆதரவு

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போல் இல்லாமல், சேலம் மாவட்டத்தில் 7 தொகுதிகளை இபிஎஸ் கைப்பற்றி இருப்பதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார். மு.க.ஸ்டாலின், நயினார் நாகேந்திரன் போன்றோர் தோல்வி அடைந்த நிலையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இபிஎஸ் வெற்றி பெற்றிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளரை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில், அதிமுகவின் கொறடாவாக நியமிக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அவர் கூறியதாவது:
ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பதவியை சி.வி.சண்முகத்துக்கு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற தேர்தலில் தோற்ற சி.வி.சண்முகத்தை மாநிலங்களவை எம்.பி. ஆக்கியவர் இபிஎஸ். ஆனால், அமைச்சர் பதவிக்காக அதிமுகவை அழிக்க சி.வி.சண்மும் நினைக்கிறார். சுயநலத்திற்காக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சி.வி.சண்முகம்.

இபிஎஸ்க்கு ஆதரவு
இபிஎஸ் எடுக்கும் முடிவிற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ்க்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளனர். தனது சுயநலத்திற்காக, சி.வி.சண்முகம் அதிமுகவை அழிக்கிறார்.

இபிஎஸ் வெற்றி
திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் நயினார் உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பத்து தோல்வி பழனிசாமி என சொன்னார்கள், ஆனால் இன்று படுதோல்வி அடைந்து உள்ளார்கள்.
இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"தங்கள் தவறை மறைக்க இபிஎஸ் மீது பழி"

0
1 hr 8 mins agoshare
"தங்கள் தவறை மறைக்க இபிஎஸ் மீது பழி"button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved