news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிஎம் வர்றார், உற்சாகத்தில் பொதுமக்கள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

சிஎம் வர்றார், உற்சாகத்தில் பொதுமக்கள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ஆய்வு

சாலையில் திரண்ட இளைஞர்கள், இளம்பெண்கள்

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், பாதுகாப்பு கெடுபிடிகளை தளர்த்தி, மெட்ரோ ரயிலில் பயணிகளோடு பயணிகளாக பயணித்து, அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். முதலமைச்சர் விஜயை காண சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் சாரைசாரையாக காத்திருந்தனர்.

முதல்வர் விஜய் மீது பாசம்
எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அதில் குறைகளும், நிறைகளும் இருக்கும். அதுபோல தவெக ஆட்சியிலும் குறைபாடுகள் மற்றும் இடர்ப்பாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி முதலமைச்சர் விஜய் மீது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வைத்துள்ள பாசம் மட்டும் இம்மி அளவும் குறைந்தபாடில்லை.

மெட்ரோ ரயிலில் பயணம்
முதலமைச்சர் விஜய் சிஎம் ஆக பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கியும், சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியானது.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

காத்திருந்த பொது மக்கள்
இதனை அறிந்த பொதுமக்கள் அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு அவரைப் பார்ப்பதற்காக மெட்ரோ வாசலிலும், மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளேயும் சாரைசாரையாக குவிந்தனர். தலைமைச் செயலகத்தில் தனது பணிகளை முடித்த விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார். அவர் மெட்ரோ ரயிலில் ஏறியதும், அவரை காண ஆவலுடன் கால்கடுக்க காத்திருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்

ஆனந்த கண்ணீர்...
அப்போது, அங்கு இருந்து 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், அவரை பார்த்த மகிழ்ச்சியில் அவரது கையை இறுகப் பற்றிக்கொண்டு, கையில் முத்தம் கொடுத்தார். முதலமைச்சர் அவரை இருக்கையில் அமரக் கூறியதும், அவரது பக்கத்தில் உட்காந்து கொண்ட மூதாட்டி, விஜய் தோளில் சாய்ந்துக் கொண்டு, தாயன்பை வெளிகாட்டினார்.

பின்னர் மாற்றுத்திறனாளி இளைஞரிடம் உரையாற்றிய விஜய் மற்ற பயணிகளுடமும் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார். முதலமைச்சர் விஜயுடன்செல்பி எடுத்துகொண்ட, பயணிகள் அதுதான் தங்களது வாழ்நாள் கனவு என்பது போல மகிழ்ந்தனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
நந்தனம் ரயில் நிலையத்தில் இறங்கிய முதலமைச்சர் அங்கிருந்து வெளியே வந்தார். அப்போது அவரைக் காண சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து, அவருக்கு கை காட்டினர். தொடர்ந்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள் சென்ற விஜய், அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். 2ஆம் கட்ட பணிகள், எதிர்கால புதிய வழித்தடங்கள் என மெட்ரோ ரயிலின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, அங்குள்ள Operation Control Centre-ஐயும் ஆய்வு செய்தார்.

நூறு அடி உயரத்தில்...
பின்னர், சாலை மார்க்கமாக கத்திப்பாரா சென்ற விஜய், காரை விட்டு இறங்கி சாலையில் நடந்து சென்றபடியே அங்கு கூடியிருந்த மக்களை கண்டு உற்சாகமடைந்தார். அதனைத் தொடர்ந்து மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்தின் 5வது வழித் தடத்திற்குட்பட்ட கத்திப்பாரா பகுதியை பார்வையிட்டார். 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பால பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், கட்டுமானப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஓட்டுநர் இல்லா ரயிலில்...
தொடர்ந்து போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி மெட்ரோ நிலையம் வரையிலும், மறுமார்க்கத்திலும் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் ரயிலில் பயணம் செய்து சோதனை ஓட்டத்தை பார்வையிட்டார். அதன்பின் விரைவில் திறக்கப்படவுள்ள புதிய வழித்தடத்தின் ஆயத்தப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பூ மழை தூவி...
ஆய்வை முடித்துவிட்டு வெளியே வந்த முதலமைச்சரை காண, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது அன்பு மழையை, பூக்கள் மூலம் சாரலாக அள்ளித் தெளித்து, அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என்எல்சி சுரங்க வளையத்தில் தென்குத்து கிராமம், பாலைவனமாக மாறுகிறதா கடலூர்?

6
26 mins agoshare
பாலைவனமாக மாறுகிறதா கடலூர்?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau