news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயகன் ரிலீஸ், விஜய் ரசிகர்கள் ஆரவாரம்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் ரிலீஸ், விஜய் ரசிகர்கள் ஆரவாரம்

தியேட்டர்கள் விழாக்கோலம்

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தடைகளைத் தகர்த்து எறிந்து, முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன், தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது. நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் குவிந்து ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர்.



சென்னை தியேட்டர்கள் விழாக்கோலம்
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தைக் காண அதிகாலையிலேயே திரண்ட தவெக தொண்டர்களால், பட வெளியீடு களை கட்டியது. சென்னையில் ரோஹிணி, கமலா, வெற்றி, உட்லண்ட்ஸ் உள்ளிட்ட தியேட்டர்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தியேட்டருக்கு படையெடுத்த அமைச்சர்கள்
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை பார்க்க ஆவலுடன் தியேட்டர்களில் சட்டப்பேரவை சபாநாயகர், அமைச்சர்கள் குவிந்தனர். திரை வாழ்க்கையை கைவிட்டு, அரசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்த உன்னதத் தலைவரின் நடிப்பைக் காண வந்ததாக புகழாரம் சூட்டினர்.

கதறி அழுத அமைச்சர்
புதுக்கோட்டை விஜய் தியேட்டரில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர் பர்வேஸ் கதறி அழுதார். சென்சார், சமூகவலைதளக் கசிவு என பலத் தடைகளை கடந்து, 6 மாதக் காத்திருப்புக்குப் பின் வெளியானதால் உணர்ச்சிப் பெருக்கில் குலுங்கி, குலுங்கி அழுதார்.

ஆனந்தப்பெருக்கில் தவெக எம்.எல்.ஏ.க்கள்
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் ரிலீசை கொண்டாடித் தீர்த்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த தாண்டவமாடினர். சாதாரண ரசிகர்களாக இருந்தவர்களை எம்.எல்.ஏ.க்களாக அழகு பார்த்த தங்களது தலைவரின் படத்தைக் கண்டு ஆனந்தப் பெருக்குடன் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேற்று நான் கண்ணீர் சிந்தியத்துக்கு இதுதான் காரணம்

0
2 hrs 40 mins agoshare
Minister parveshbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau