news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, திரையுலகம் சோகம்
tv

Also Watch

tv

Read this

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, திரையுலகம் சோகம்

16 வயதினிலே தொடங்கி...

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

என் இனிய தமிழ் மக்களே... என்ற கரகர குரலில், தமிழ் திரையுலகை அரை நூற்றாண்டாக ஆண்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் உயிர் பிரிந்தது.

இயக்குநர் இமயம் சரிந்தது
இயக்குநர் இமயம் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று ஜூன் 10ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

16 வயதினிலே தொடங்கி...
கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் படப்பிடிப்பு அரங்கின் உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

கிழக்கே போகும் ரயில்
சிகப்பு ரோஜாக்கள்
அலைகள் ஓய்வதில்லை
முதல் மரியாதை
கருத்தம்மா
என்று, அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்கள். 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

விருதுக்கு பெருமை

பாரதிராஜா படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்று உள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு திரைப்பட பல்கலைக்கழகமாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே.

குணச்சித்திர நடிகராகவும்...
அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார். கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று ஜூன் 10ஆம் தேதி அதிகாலையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரதிராஜா குழந்தை மாதிரி என ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

10
1 hr 27 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved