news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து
tv

Also Watch

tv

Read this

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

பில்லூர், கள்ளக்குறிச்சி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வேன் விபத்து

திருச்சி மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் இளைய மகள் கவிதாவுக்கு கடந்த ஏழாம் தேதி திருச்சியில் திருமணம் நடந்து முடிந்தது. இன்று
மாலை 6 மணிக்கு சென்னை ஆவடியில் வரவேற்பு நிகழ்சி நடைபெற உள்ளது.

இதற்காக மதியழகன் மற்றும் அவரின் உறவினர்கள் 30 பேர் திருச்சியிலிருந்து சென்னை ஆவடிக்கு சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை ஈரோடு மாவட்டம் காக்குலம் பகுதி சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.

இந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்லூர் கூட்டுச்சாலையில் வந்தபோது, திடீரென சாலையைக் கடந்த இனோவா கார் மீது மோதாமல் இருக்க வேனை வலதுபுறம் திருப்பினர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர் திசையில் உள்ள சென்னை-திருச்சி சாலைக்கு சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த விபத்தினால் திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போலீசார் சரி செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் எடைக்கல்
போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரவேற்பு நிகழ்சிக்காக உறவினர்களுடன் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
1 hr 45 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved