news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கார்ப்பரேட் கம்பெனியாக மாறிய திமுக - இபிஎஸ் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

கார்ப்பரேட் கம்பெனியாக மாறிய திமுக - இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுக, கருணாநிதி குடும்பத்தின் கையில் சிக்கி, கார்ப்பரேட் கம்பெனி போல மாறி விட்டதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அண்ணாவின் கனவை நனவாக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என்றும் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், 2021 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க சாதகமான சூழல் இருந்ததாகவும், வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணமே OPS தான் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காஞ்சிபுரத்தில் இபிஎஸ் பிரச்சாரம்
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், உத்திரமேரூர் வேட்பாளர் பெ.மகேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் பழனி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அதிமுக ஆட்சி
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் நிலவியது. ஆனால், கட்சிக்குள் இருந்த சிலரே திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு சூழ்ச்சி செய்து ஆட்சி அமைவதைத் தடுத்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி மூலம் அடையாளம் பெற்றவர்கள், தற்போது வெட்கமே இல்லாமல் எம்.ஜி.ஆரால் 'தீய சக்தி' என வர்ணிக்கப்பட்ட திமுகவில் இணைந்து துரோகம் செய்துள்ளனர்.

கேலிக்கூத்தான கூட்டணி
திமுக - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை 20 நாட்கள் இழுபறியாக நீடித்தது. ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். ஆனால் அதிமுக கூட்டணி மிகவும் சுமுகமான முறையில் உடன்பாட்டை எட்டியது. இது ஒரு இயற்கையான கூட்டணி. திமுக கூட்டணியில் மதிமுக அவைத் தலைவர் ‘அழுதுகொண்டே சிரிக்கிறோம்’ என்கிறார்.

கம்யூனிஸ்டுகள் கடந்த முறை வெற்றி பெற்றும் மக்கள் பிரச்சினையைப் பேசாமல் திமுகவுக்கு ஜால்ரா போட்டதால், இந்த முறை அவர்களுக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது. விசிக வேட்பாளர் தன்னை ஒரு காங்கிரஸ்காரர் என்கிறார். இப்படி திமுக கூட்டணி ஒரு 'கேலிக்கூத்தான கூட்டணியாக' உள்ளது.

தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?
உதயநிதி ஸ்டாலின் தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார். நான் யார் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு விஷயத்தைச் சொன்னால், ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல தன்னைச் சொன்னதாக எடுத்துக் கொள்கிறார். அவரது நெஞ்சில் உள்ள குற்றம் புரிகிறது. பல கோடி அரசுப் பணத்தைச் செலவழித்து சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கார் ரேஸ் நடத்தியதைத் தவிர உதயநிதி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?

முதன்மை மாநிலமாக மாற்றினோம்
2021 தேர்தலிலேயே மகளிருக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அதிமுக அறிவித்தது. அதை ஸ்டாலினுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றாலும், உதயநிதியாவது படித்துப் பார்க்கட்டும். அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் தான் தற்போது மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி இருந்தபோதும் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மக்களைக் காத்தோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். உயர்கல்வியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றினோம்.

அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி
பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தபோது அது சரியாகத் தெரிந்த அவர்களுக்கு, அதிமுக வைத்தால் மட்டும் தவறா? ஏமாற்றுவதற்கு ஒரு குடும்பம் உண்டு என்றால் அது கருணாநிதி குடும்பம் தான். மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு இபிஎஸ் பேசி, வாக்கு சேகரித்தார்.

Related Link
தோல்வியின் விரக்தியில் இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தோல்வியின் விரக்தியில் இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனிமொழியை இழிவுபடுத்தினாரா இபிஎஸ்?

5
4 mins agoshare
கனிமொழியை இழிவுபடுத்தினாரா இபிஎஸ்?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved