news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்
tv

Also Watch

அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது

122

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளவோ, பதற்றம் அடையவோ தேவையில்லை என்றும், போதுமான எரிபொருள் கையிருப்பில் இருக்கிறது என்று, மத்திய அரசு கூறி இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

கடிதம் எழுதி உள்ளேன்
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும் தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
ஹார்முஸ் நீரிணையை கடந்த 2 கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையை கடந்த 2 கப்பல்கள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved