பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 முதல் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.