Also Watch
Read this
By: Web Team

தேர்தல் என்று வந்து விட்டால், திமுகவினரை அடிக்க ஆளே இல்லை என்று, தமிழ்நாடே சொல்லும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் காணொலி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேசி இருப்பதாவது:
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் முழு அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். நமது இலக்கு ஒன்றுதான், 2026ல் திராவிட மாடல் 2.0ஐ தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும். இந்த வெற்றி திமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கான வெற்றியாக இருக்கும்.
தேர்தல் நாள் வரை பசி, தூக்கம், ஓய்வு ஆகியவற்றை மறந்து, உங்கள் உழைப்பை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை காக்க நம்மால் மட்டுமே முடியும்.

இதற்காக, உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன் – உழைப்பை கொடுங்கள். 2026 தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், செப்டம்பர் 20, 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
பொதுக்கூட்டங்கள் மூலம், தமிழ்நாட்டு மக்களிடையே நமது கொள்கை, திராவிட மாடலின் சாதனைகளை எடுத்துச் செல்வோம். இந்த வெற்றி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும். வரும் 2026ல் மக்கள் மீண்டும் நம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், இந்த வெற்றி தானாக வராது. ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகியும் மக்களோடு மக்களாக இணைந்து உழைக்க வேண்டும்.
இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதையும் கேளுங்கள்: DMK | MKStalin | தேர்தல்னு வந்துட்டா.. முதலமைச்சர் பெருமிதம்