Also Watch
Read this
By: Web Team

மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்காததால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது உண்மை தான் என்பதாக எடுத்துக்கொண்டு நீக்குவதாக அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:
மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு, மல்லை சத்யாவுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், அந்த கடிதத்துக்கு பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவும் இல்லை, விளக்கமும் அளிக்கவில்லை.
எனவே, மதிமுகவின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். மல்லை சத்யா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனால், மதிமுக சட்ட விதி 19 பிரிவு 5, விதி 19 பிரிவு 12, விதி 35 பிரிவு 14, விதி 35 பிரிவு 15, விதி 35 பிரிவு 14ன்படி துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்கள்: மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் - வைகோ அதிரடி | Vaiko | Mallai Sathya | MDMK