Also Watch
Read this
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் நாள் வரை ஊண், உறக்கம் இல்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
உதயசூரியன் சின்னத்திலும் கூட்டணிக் கட்சி சின்னங்களிலும் மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க பாடுபடுவோம் என்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

உதயசூரியன் உதிக்கட்டும்
இதுதொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:
உழைப்பை அள்ளிக் கொடுங்கள், உதயசூரியன் உதிக்கட்டும். வீடு தோறும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் சென்று அடைந்து உள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றும் தொலை நோக்குத் திட்டங்கள், அரண் என அனைவருக்குமான தமிழகத்தை காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல்.

இது தான் தி.மு.க.
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் மற்றும் கூட்டணி ஒப்பந்தங்களை இறுதி செய்வது குறித்து விவாதிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மார்ச் 16, 2026 அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார வியூகம் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved