Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 01:25 PM
By: Fyrose Banu

சிபிஎம் மாநில செயலாளர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெண் காவல் ஆய்வாளருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேனர் அகற்றப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய சிஐடியு சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்கள் தங்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு வழங்கியும் ஊதிய உயர்வு வழங்கியும் ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தையை மீறி வைக்கப்பட்ட பேனர்
இந்த நிலையில் திருவாரூர் மின் வாரிய அலுவலக வளாகத்தில் கள உதவியாளர் பதவி உயர்வுக்கு போராடிய மத்திய சிஐடியு சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கள உதவியாளர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். முன்னதாக இந்த நிகழ்ச்சி அரங்கில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா பேனர் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டத்திற்கு உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும் என நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து கூறியுள்ளார். அப்போது அவருக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிகழ்ச்சியை ஸ்டாப் பண்ண வரவில்லை
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடந்த வாக்குவாதத்தில் காவல் ஆய்வாளர் தான் நிகழ்ச்சியை ஸ்டாப் பண்ண வரவில்லை என்றும் ஆர்டிஓவிடம் உரிய அனுமதி பெற்று நடத்தினால் தானே பாதுகாப்பு தரப் போகிறேன் என்று கூறினார். அதற்கு சங்க நிர்வாகி ஒருவர் நாங்கள் செலிப்ரேஷன் செய்வதற்காகத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேனர் மட்டும் அகற்றப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved