news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த ராகுல்; சுவாரஸ்யம்
tv

Also Watch

tv

Read this

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த ராகுல்; சுவாரஸ்யம்

டெல்லி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ragulgandhi

’தேர்தல் ஆணையத்தால், இறந்தவர்கள் எனக்கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால்,  "இறந்தவர்கள்" என்று கூறி, பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து ராகுல் காந்தி பேசி உள்ளார்.

இதுகுறித்து தமது சமூக வலை தள பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டிருப்பதாவது:

வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், ’இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை தந்தமைக்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

இவ்வாறு ராகுல்காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 54 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved