news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ரத்தன் பண்டிட் ராஜகுரு விவகாரம், கொந்தளித்த பிரேமலதா
tv

Also Watch

tv

Read this

ரத்தன் பண்டிட் ராஜகுரு விவகாரம், கொந்தளித்த பிரேமலதா

உணர்ச்சி பொங்கிய சௌமியா அன்புமணி

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், வெளிப்படையான ஆட்சி எனக்கூறும் முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு திரட்டிக்கொண்டிருந்த நேரத்தில் காரில் முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாக வந்த நபர் குறித்து விளக்க வேண்டும் எனவும் ரத்தன் பண்டிட் அவருக்கு ராஜகுரு என்றால் அதனை பர்சனலாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆவேசமாக பேசினார். அதேபோல், ஒரு மதுபானக்கடையை மூடினால் அதன் அருகிலேயே 4 சந்துக்கடைகள் முளைக்கும் என சௌமியா அன்புமணி உணர்ச்சிபொங்க பேசிய நிலையில் இருவரது பேச்சும் பலரையும் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.

விஜய் உத்தரவுக்கு வரவேற்பு
விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது பேசினர். அந்தவகையில் தீர்மானத்தின் மீது பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல், அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும், மரபையும் முதலமைச்சர் ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது எனவும் முதல் அறிவிப்பிலேயே பெண்களை பாதுகாக்கவும், 717 மதுக்கடைகளை மூடுவோம் எனக்கூறியதும் வரவேற்கத்தக்கது என பேசினார்.

குதிரை பேரம் தலை குனிவு
மக்கள் நலனின் அக்கறைகொண்டுள்ள இந்த அறிவிப்புகளை எல்லாம் எப்படி மனமுவந்து வரவேற்கிறோமோ, அதேபோல் தான் பதவியேற்றபோது முதலமைச்சர் விஜய் கூறியதுபோன்று ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான ஆட்சியும் இருக்க வேண்டும், அது வெறும் சொல்லில் அல்ல செயலிலும் வேண்டும் எனக் கூறினார். குதிரைபேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் சொல்லும்போது மிகவும் மன வேதனையடைந்ததாக கூறிய பிரேமலதா விஜயகாந்த், இங்கு யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சரே கூறினார். அப்படி இருக்கும்போது, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு திரட்டிக்கொண்டிருந்த பரபரப்பான அரசியல் சூழலில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு இன்னோவா காரில் முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாக சென்ற நபர் யார் என்பதை விஜய் வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ஒருவேளை முகமூடி அணிந்து வந்ததற்கு காரணம் குதிரைபேரம்தான் என்றால் அதைவிட தலைகுனிவு வேறு என்ன இருக்க முடியும் எனவும் கூறினார்.

என்ன மெசேஜ் சொல்ல வருகிறீர்கள்?
தான் அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லையென்று கூறும் முதலமைச்சர் விஜய், அவருடைய ராஜகுருவாக இருக்கக்கூடிய ரத்தன் பண்டிட் என்பவரை சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ரத்தன் பண்டிட் முதலமைச்சரின் ராஜகுருவாக இருந்தால் அவரை தனிப்பட்ட முறையில் பணியமர்த்திக் கொள்ள வேண்டுமே தவிர அரசு உயர்பதவியில் கொண்டு வந்து இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் சொல்ல வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். குதிரைபேரம், முகத்தை மூடிக்கொண்டு முதலமைச்சரை பார்க்க வந்த நபர், ரத்தன் பண்டிட் நியமனம் ஆகிய 3 விஷயங்களை மட்டும் தனது கணீர் குரலில் அழுத்தமாக பதிவு செய்துவிட்டு பிரேமலதா அமர, அதனை தொடர்ந்து தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசினார்.

ஒரு கடையை மூடினால்...
மது ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய சௌமியா அன்புமணி, 717 மதுபானக்கடைகள் மூடப்படுவது சந்தோஷம்தான், ஆனால் ஒரு கடையை மூடினால் அதன் அருகிலேயே சட்டவிரோத மது விற்பனை நிலையங்களான 4 சந்துக்கடைகள் புதிதாக முளைக்கும் என மனம் நொந்து பேசினார். ஆகையால், விழிப்புடன் இருந்து அந்த சந்துக்கடைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சௌமியா அன்புமணி ஆவேசமாகவும், புள்ளிவிவரத்தோடும் பேசிக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் விஜய்யும் அதனை காதுகொடுத்து கேட்டு குறிப்பு எடுத்துக்கொண்டார்.

வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருப்பதா?
பேரவை தலைவரை நோக்கி பார்வையை சுழலவிட்டு தனக்கு ஒரு ஆசை என கோரிக்கை வைத்த சௌமியா அன்புமணி, தன் பேரப்பிள்ளைகள் வளர்ந்து வரும்போது மது இல்லாத, போதை பழக்கம் இல்லாத தமிழ்நாடு உருவாகி இருக்க வேண்டும் எனவும் அது தன் ஆசை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களின் ஆசையும்கூட என்றார். மேலும், டாஸ்மாக் கடையை தாண்டி பெண்கள் செல்லும்போது தலைகுனிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், கூறினார். பள்ளி, கல்லூரி, வேலை, சொந்தபந்தங்களின் வீடுகள் என பல இடங்களுக்கு பெண்களை தனியாக அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருப்பதா? மதுபோதைதான் பாலியல் வன்கொடுமைக்கே அடித்தளம் என மனம் குமுறினார். சட்டமன்றத்தில் ஆவேசமும், உணர்ச்சிபூர்வமும் பொங்க பேசிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சௌமியா அன்புமணியின் பேச்சு பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

Related Link
''புஷ்பா பட பாணியில் புதிய ஆட்சி

''புஷ்பா பட பாணியில் புதிய ஆட்சி" - உதயநிதி விமர்சனம்

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெரு விளக்குகள் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிப்பு

0
8 mins agoshare
தொழிலாளர்கள் பாதிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved