Also Watch
Read this
தமிழக சட்டப்பேரவையில் மூத்த தலைவர்கள், திரை பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2ஆவது நாளாக...
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று ஜூன் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் முதலில் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு
சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு.ராமசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதிராஜாவுக்கு அஞ்சலி
தொடர்ந்து,
திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி
கே.ராஜன்
இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சபாநாயகரின் உத்தரவைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved