news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆட்சித் திறனுக்குதான் ஆறு மாதம் அவகாசம் - ஆ.ராசா திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆட்சித் திறனுக்குதான் ஆறு மாதம் அவகாசம் - ஆ.ராசா திட்டவட்டம்

அன்றாட அவலங்களை விமர்சித்தே தீருவோம்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அரசின் ஆட்சித் திறனை தான் ஆறு மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் என்று கூறினோமே தவிர, அன்றாடம் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை, நிர்வாக குறைபாடுகளை விமர்சிக்க கூடாது என்று நீங்களும் சொல்ல முடியாது, நாங்களும் கேட்க முடியாது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

“கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?”
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து கூறியதாவது;
அரசியலமைப்பு ஒழுக்கம் இன்றி உரையாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானவராக இல்லாமல் பிதற்றி இருக்கிறார். கர்ஜித்ததாக சொல்லி கொண்டு கத்தி பேசியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். அல்லு சில்லு வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு அவர்கள் வாக்கை வாங்கினீர்கள். தமிழ்த்தாய் வாழ்த்திற்காக கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?

நோ கமெண்ட்ஸ் அமைச்சா்கள்
கச்சத்தீவு, மேகதாது விவகாரம் என எதைப்பற்றி கேட்டாலும் தவெக அமைச்சா்களின் ஒரே பதில் நோ கமெண்ட்ஸ். கச்சத்தீவு பற்றி கேள்வி கேட்டால் போராடுவோம், கேட்கிறோம் என பதில் கூறாமல் நோ கமெண்ட்ஸ் என பதில் சொல்கிறாா்கள்.

உங்கள் சக்தி என்னவானது?
பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது விஜய் bro? எங்களை தீய சக்தி, தீய்ந்து போன சக்தி என விமா்சித்தீா்களே bro, பிரதமருக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஏன் எதிா்க்கவில்லை விஜய் bro? மதம் பார்க்க மாட்டோம் என்றார் முதல்வர், கை, நெற்றியில் ஒரு மதம், பதவியேற்ற போது ஜோசப் விஜய் என ஒரு மதம்.



தூக்கம் வரல விஜய் ப்ரோ...
மின்சாரம் கட் ஆகிறது விஜய் ப்ரோ, தூக்கம் வரல ப்ரோ, ஏதேனும் முடிவு எடுங்க ப்ரோ. தவெக 2ஆம் கட்ட தலைவா்களை போல் முதல்வர் விஜய் பேசுகிறாா்.

"கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேசவில்லை"
கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் தலைவா்கள் யாரும் அதிமுகவிடம் பேசவில்லை. 2ஆம் கட்ட தலைவா்கள் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம், எங்கள் தலைவா் பேசவில்லை. தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசை எப்படி முதலமைச்சர் விஜய் குறைகூற முடியும்?

“சகோதர முரண்பாடு"
விடுதலை சிறுத்தைகள் மீதான விமா்சனம் சகோதர முரண்பாடு தான்; திருமாவளவன் எனது அண்ணன், எங்களுக்குள் இருப்பது சகோதர உணா்வு தான். யாாிடம் அதிக பாசம் வைத்தோமோ அவா்களிடம் தான் அதிக கோபம் வரும், விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம்.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.

Related Link
திமுக உடன் கூட்டணி வைத்தது தான் பெரிய தப்பு என்கிறார் வைகோ

திமுக உடன் கூட்டணி வைத்தது தான் பெரிய தப்பு என்கிறார் வைகோ

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

6
5 hrs 34 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved