3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இலங்கை அதிபர் திசநாயகா பேசினார். இலங்கை அதிபராக திசநாயகா பதவியேற்ற பிறகு, அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.