இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எஃப்15 மூலம் விண்ணில் ஏவப்பட்ட NVS-02 செயற்கை கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.