Also Watch
Read this
By: Web Team

கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது இயல்பான ஒன்றுதான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிக தொகுதிகளை கோரும் எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது, இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்போம் எனக் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved