news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews IPL-ல் குஜராத் டைட்டனஸ் வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனை
tv

Also Watch

tv

Read this

IPL-ல் குஜராத் டைட்டனஸ் வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனை

IPL 2026

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாய் சுதர்சன்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த வீரர் :

பெங்களூரு அணிக்கு எதிராக 100 ரன்கள் விளாசியதின் மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்கிற பெருமையை குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.

இந்த போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 33 பந்துகளில் அரை சதம் கடந்ததோடு, 58 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம், 47 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில் 48 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35 மற்றும் 36-வது லீக் சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. டெல்லியில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில், இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

ஐ.பி.எல். தொடரின் 34-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்த, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் சாய் சுதர்சன் 58 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 206 என்கிற கடினமான இலக்கை 18.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார்.

2-வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி :

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் போட்டியில், பெண்கள் பிரிவில், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

இதில், சிறப்பாக விளையாடிய பிளிஸ்கோவா 6-க்கு 3, 7-க்கு 6, 8-க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேசமயம், இந்த தோல்வியின் மூலம் மரியா சக்காரி நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Link
வரலாற்று வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

வரலாற்று வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்

2
16 mins agoshare
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved