Also Watch
Read this
Posted on: Feb 02, 2026 01:03 PM
By: Manigandan Raja

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குரூப் 2 பிரிவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 46.2 ஓவர்கலில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உஸ்மான் கான் 66 ரன்களும், ஹம்சா ஜூஷீர் 42 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் 8 புள்ளிகளை பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved