news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விளையாட்டுச் செய்தித் தொகுப்பு
tv

Also Watch

tv

Read this

விளையாட்டுச் செய்தித் தொகுப்பு

ரஷித்கான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டுச் செய்தித் தொகுப்பு

டெல்லி, மும்பை வீரர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் : 

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை துணை நிலை ஆளுநர் தரன்ஜித் சிஞ் சந்து ((Taranjit Singh Sandhu)) சந்தித்து பயிற்சி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் ஜெர்சி ஒன்றை துணை நிலை ஆளுநருக்கு பரிசளித்தது.

ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் வீரர்களை அவமதிக்கக்கூடாது : 

போட்டியின்போதும், போட்டிக்கு பின்னரும் எந்தவொரு ஐபிஎல் அணியின் உரிமையாளரும் அணி வீரர்களை அவமதிக்கும் நோக்கில் பேசக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் உரிமையாளர்களுக்கு நிச்சயம் தடை விதிக்கப்படும் எனவும் பிசிசிஐ எச்சரித்துள்ளது.

லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கோவை சுட்டிக் காட்டிதான் பிசிசிஐ எச்சரித்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

சமீர் ரிஸ்வி அதிரடி - மும்பையை வீழ்த்திய டெல்லி : 

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சமீர் ரிஸ்வி அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19-வது ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ரஷித்கான் வேதனை :

ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ரஷித்கான், கடைசி பந்தில் வென்றிருக்க வேண்டும், ஆனால் தன்னால் அது முடியாமல் போனது என வேதனை தெரிவித்தார். போட்டிக்கு பிறகு மிகவும் வருத்தமாக உணர்ந்ததாகவும், வரும் போட்டிகளில் மீண்டு வருவோம் எனவும் அவர் கூறினார்.

Related Link
இன்றைய சினிமா தகவல்கள்

இன்றைய சினிமா தகவல்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலமைச்சர் பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!

2
34 mins agoshare
CM Speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved