Also Watch
Read this
By: Web Team

தனது செயலுக்கு பிசிசிஐ-யிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, ஆசிய கோப்பை வேண்டும் என்றால், இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ், துபாயில் உள்ள ACC அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, பரிசளிப்பு விழாவின்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வியின் கைகளால் கோப்பையை பெற மறுப்பு தெரிவித்தது. நக்வியும் வேறொருவரின் கைகளால் கோப்பையை வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளாமல் அதனை கையோடு எடுத்துச் சென்றார்.