news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 'கார்க்' தீவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா
tv

Also Watch

'கார்க்' தீவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா

எச்சரிக்கை விடுத்துள்ளார்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான் எச்சரிக்கை

தக்க பதிலடி கிடைக்கும் என ஈரான் எச்சரிக்கை 

ஈரானுக்கு சொந்தமான சொந்தமான 'கார்க்' ((Kharg)) தீவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி((Esmaeil Baghaei)) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தரை வழி ஆக்கிரமிப்பு முயற்சி நடந்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் ஈரான் கூறியுள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் இருந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 4 டாலரை தாண்டிய ஒரு கேலன் பெட்ரோல் விலை

அமெரிக்கா-ஈரான் மோதலால் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு 4 டாலரைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதத்தில் தற்காலிக போர் நிறுத்த ஓப்பந்தத்தின்போது, பெட்ரோலின் விலை கேலனுக்கு 4 டாலருக்கு கீழ் விற்பனையானது. இந்த திடீர் விலை உயர்வு ஓட்டுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வீரரின் உயிருக்கும் பல மடங்கு விலை

ஒவ்வொரு அமெரிக்க வீரரின் உயிருக்கும் ஈரான் பல மடங்கு விலை கொடுக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் ஈரான் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் மாயமானதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு அறிவித்திருந்தது.

இந்த சூழலில், அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், கொல்லப்படும் ஒவ்வொரு அமெரிக்க வீரரின் உயிருக்கும் ஈரான் பல மடங்கு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவு பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் ராணுவத்தின் ஒவ்வொரு தலைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Link
நேதன்யாகுவை கைது செய்ய திட்டம் - மேயர் மம்தானி

நேதன்யாகுவை கைது செய்ய திட்டம் - மேயர் மம்தானி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved