news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும் இந்தியா?
tv

Also Watch

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும் இந்தியா?

Russia

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும் இந்தியா :

நாட்டின் நலன் கருதியே எரிசக்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்த நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் (பிப். 2) இந்தியா உடனான வணிக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான 25% வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இதோடு மட்டுமின்றி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, நிலக்கரி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Related Link
இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் போதைப் பொருள்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் போதைப் பொருள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கருகும் பயிர்கள், கண்ணீர் வடிக்கும் நாமக்கல் விவசாயிகள்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved