தமிழ்நாடு

புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொடைக்கானல் ஏரிசாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பிரசாதம் வாங்கி சென்றனர். கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிறப்பு ஆராதனைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே ஏராளமானோர் ஏரி சாலை பகுதியில் சுமார் 3 கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு சாய் சுருதி அறக்கட்டளை சார்பில் கம்பளி, வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

00 Comments

Leave a comment