தமிழ்நாடு

வக்கரகாளி அம்மன் கோவிலில் சித்திரை முழுநிலவு திருவிழா

வக்கரகாளி அம்மன் கோவிலில் சித்திரை முழுநிலவு திருவிழா

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் அமைந்துள்ள வக்கரகாளி அம்மன் கோவிலில் சித்திரை முழுநிலவு ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஜோதி தரிசனம் நடைபெற்றாலும், சித்திரை பௌர்ணமி என்றதால் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலைமோதியது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கோவில் மேலே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஜோதி ஏற்றப்பட்டதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது.

00 Comments

Leave a comment