தமிழ்நாடு

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையில் இபிஎஸ் இரட்டை நிலைப்பாடு-ஓபிஎஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையில் இபிஎஸ் இரட்டை நிலைப்பாடு-ஓபிஎஸ்

 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தன் சுயநலத்திற்காக தி.மு.க.விடம் சரணாகதி அடைந்துவிட்டார் எனவும் கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது எனவும் அவர் கடுமையாக சாடினார்.

00 Comments

Leave a comment