Big Stories

விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' படத்தின் டீசர் பெண் பத்திரிக்கையாளர்களை மேடையேற்றி வெளியீடு

பிச்சைக்காரன் படத்தை இயக்க வள்ளிமயில் படத்தில் பணியாற்றியது உதவியாக இருந்தது- விஜய் ஆண்டனி!

கதாநாயகியின் கதாபத்திர பெயரில் உருவான படங்களில் நடித்த பெரிய நடிகர்கள் என்றால் எம்.ஜி.ஆர்- ரஜினி; கதாநாயகி பெயரில் படத்தின் தலைப்பு குறித்து விவரித்த பேசிய நடிகர் சத்யராஜ்!

பெண் பத்திரிகையாளர்கள் வெளியிட்ட விஜய் ஆண்டனியின் வள்ளிமயில் படத்தின் டீசர்!


சென்னை பிரசாத் லேபில் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'வள்ளி மயில்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சுசீந்திரன், சத்யராஜ், விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவின் சிறப்பாக வள்ளிமயில் என்ற படத்தின் கதாநாயகி கதாபத்திரத்தில் உருவாகி இருப்பதால் இப்படத்தின் டீசரை பெண் பத்திரிக்கையாளர்களை மேடையேற்றி படக்குழுவினர் வெளியிட்டனர்.

நடிகர் சத்யராஜ் மேடையில் பேசுகையில்,

நிறைய படங்களில் நமது கொள்கை கோட்பாடுகளை உள்ளே கொண்டு வந்து நடிக்க முடியாது.

சினிமா என்பது தொழில். ஒரு சில படங்களில் அமைந்து விடும். அப்படி இந்த படம் அமைந்துள்ளது.

சுசீந்திரன் இன்னொரு கதை கூறி உள்ளார் அது ஒரு நெகடிவ் சேடு உள்ள கதாபாத்திரம் நிச்சயமாக அதை செய்வோம்.

விஜய் ஆண்டனியுடன் இது 2-வது படம். இதற்கு முன் காக்கி படத்தில் நடித்துள்ளேன்.

'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்' என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார்.

வள்ளிமயில் படம் வந்து பூவுக்குள் பூகம்பம் மாதிரி. தலைப்பு இனிமையாக உள்ளது. கதாநாயகி பெயரில் உள்ளது.

அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய நன்றி.

நான் நடித்த 'திருமதி.பழனிச்சாமி' படத்துக்கு விகடனில் அது ஏன் இப்படி ஒரு தலைப்பு நாயகிக்கு பெயர் இல்லையா அது என்ன அப்படி ஒரு ஆணாதிக்க எண்ணம் என ஒரு பேச்சு வந்தது.

எம்ஜிஆர் அநேக பெண் சம்பந்தப்பட்ட பட தலைப்புகளில் நடித்துள்ளார் ஏன் அவர் தயாரித்த படத்திற்கும் கூட அடிமைப்பெண் என தான் வைத்தார் அவருக்கு பிறகு ஒரு பெரிய நட்சத்திரம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் சந்திரமுகி படத்தில் நாயகி பெயரில் தான் அவர் நடித்திருப்பார் என கூறினார்.

ஹீரோயினி பெயரில் உள்ள படத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும் என அடம் பிடிக்கும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள்.

ஏன் விஜய் ஆண்டனியின் இந்த படமும் அக்ஷன் படம்தானே ஏன் பெண் கதாபாத்திர பெயர் என கேட்டிருக்கலாம் ஆனால் விஜய் ஆண்டனி அப்படி இல்லாமல் பெருந்தம்மையாக இந்த டைட்டிலில் நடித்தது பெரிய விஷயம்.நானும் 100 படங்களில் நாயகனாக நடித்துள்ளேன் அந்த ஈகோ என்ன என்று எனக்கும் தெரியும் எனவே நாயகி பெயரில் பட தலைப்பு வைத்த உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

இமான் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சிபியும் இவரும் ஒன்றாக படித்தவர்கள், ஈழத்தமிழர் பற்றி பேசும் படமாக உருவான உச்சிதனை முகர்ந்தால் படத்துக்கு சம்பளம் வாங்காமல் டி.இமான் இசையமைத்ததாக கேள்விப்பட்டேன். அவருக்கு வாழ்த்துகள்.

இந்த படத்தின் கதாநாயகி ஃபரியா, dedicated பெண். இந்திய சினிமாவிலேயே மிக உயரமான கதாநாயகி. அந்தளவு உயரம் என்றார்.


நடிகர் விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில்,

பிச்சைக்காரன் படம் இயக்கும் போது பாதியில் வள்ளிமயில் படத்தில் நடிக்க வேண்டி இருந்தது.

இதனால் பிச்சைக்காரன் இயக்க நிறைய உதவியது. எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நல்ல கதையில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்.

டி.இமான் இசையமைக்கும் போது உங்களோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுகிறேன்.

நானெல்லாம் இசையே தெரியாமல் இசையமைத்து விட்டேன்.

ஆனால் உங்களுடைய பணி மிக சிறப்பு. ஒரு சில இசையமைப்பாளர்கள் தான் தனித்துவத்தோடு கிராமரோடு பணியாற்றுபவர் நீங்கள்..

இந்த உயரத்துக்கு வந்துள்ளீர்கள். ரொம்ப சந்தோஷம்.

இயக்குனர் சுசீந்திரன் மேடையில் பேசுகையில்,

வள்ளி மயில் கிரைம் த்ரில்லர் படமாக்க உருவாகியுள்ளது. இந்த படத்தின் வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார்.

82 காலகட்டத்தில் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இமானுடன் இது 7வது படம். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது இந்த படத்திலும் இசை நன்றாக வந்துள்ளது.

படம் ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை எந்த கேள்வியும் கேட்கமாட்டார்.

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு இருந்து இந்த படத்தின் கதையை எழுதி வருகிறேன்.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் டி.இமான் மேடையில் பேசுகையில்,

சுசீந்திரனுடன் சேர்ந்து நிறைய படங்கள் பணியாற்றி உள்ளேன் . பல ஆண்டுகளுக்கு முன் படத்தின் கதை என்னிடம் கூறினார்.

தற்போது படமாக உருவாகி இங்கு வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

பாடல்களுக்கு இசையமைத்து தற்போது நடிகராக உயர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.

வாழ்த்துகள். 'நான்' படத்தை பார்த்து விட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

சுசீந்திரனுக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. வள்ளிமயில் மூலம் நிறைவேறும்.
பின்னணி இசையில் பணியாற்றவும் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

விஜய் ஆண்டனியின்

00 Comments

Leave a comment