தமிழ்நாடு

அதிமுக-பாஜக தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்பார்கள்...அதிமுக- பாஜக கூட்டணி முறிவு குறித்து விமர்சனம்

பாஜகவுடன் உடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு தேர்தல் நேரத்தில், அதிமுகவினர் கூட்டணி வைப்பார்கள் என அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்தார். கிருஷ்ணகிரியில் நடந்த திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார். மாநாடு எப்படி எல்லாம் இருக்ககூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதிமுக மாநாடு இருந்ததாக கூறிய அவர் புளி சாதமும் சாம்பாரும் தான் மாநாட்டின் தலைப்பாக இருந்ததாக விமர்சித்தார். மேலும் தமிழ்நாடு என்னும் வீடு சுத்தமாக வைத்திருக்க, விஷ பாம்பான பாஜகவையும், குப்பையான அதிமுகவையும் ஒழித்ததாக வேண்டும் என்றார்.

00 Comments

Leave a comment