news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home bigstoriesnews அச்சத்தை ஏற்படுத்தும் ரேபிஸ் தொற்று தடுப்பூசி போட்டாலும் பயன் இல்லையா? மரணத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி?
tv

Also Watch

tv

Read this

அச்சத்தை ஏற்படுத்தும் ரேபிஸ் தொற்று தடுப்பூசி போட்டாலும் பயன் இல்லையா? மரணத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி?

ரேபிஸ் தொற்று

114

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Street dogs

ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் 100% மரணம் நிச்சயம், தமிழகத்தில் இந்த ஆண்டு 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை சூழ்ந்துள்ள ரேபிஸ் தொற்று அச்சத்தை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?.

பொது சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறியதா? அரசு எடுக்க போகும் நடவடிக்கை என்ன?

சமீபத்தில் சென்னையில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 5970 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அது மட்டுமே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 32 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கருத்தடை தடுப்பூசியும், நோய் தொற்று தாக்காத வண்ணம் காக்க ரேபிஸ் தடுப்பூசியும் முழு வீச்சில் போடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதை சாதாரண நாய்க்கடி பிரச்சினையாக கடந்து விட முடியாது என்று எச்சரிக்கும் வகையில் கிடைத்துள்ள செய்தி தான் கேரளா மாநிலத்தில் சிறுவர்கள் இருவருக்கு நாய் கடித்து அதற்காக ரேபிஸ் தடுப்பூசி போட்டும் கூட அவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.


நாய்க்கடி ஏற்பட்டால் தடுப்பூசி போட்டுக் கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்று ஒரு நம்பிக்கை இருந்து வந்தது தற்போது அதிலும் சந்தேகம் எழுந்திருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த பிரச்சினையை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கையுடன் புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.குறிப்பாக இந்த ரேபிஸ் தொற்றுகளை பொருத்தவரை தெற்கு ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரேபிஸ் என்பது நாய்கள் உள்ளிட்ட வெறித்தனமிக்க விலங்குகளால் கடிக்கப்படும் போது பரவும் வைரஸ்.ஒரு முறை அறிகுறிகள் தோன்றத் துவங்கினால், சிகிச்சை பலனளிக்காது இது 100% மரணமளிக்கும் நோயாக கருதப்படுகிறது.

தாமதமாக சிகிச்சை பெற்றாலும், தடுப்பூசி போட்டாலும் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும். கடிபட்ட இடத்தை சரியாக கழுவாததும், வைரஸ் உடலில் பரவ நேரம் தருகிறது. தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது உயிரை பணயம் வைக்கும் தவறு உள்ளிட்ட எச்சரிக்கையை சுகாதாரத்தை கொடுத்துள்ளது.

இந்த ஆண்டு 18 பேர் தமிழகத்தில் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் வரையில் நாய் கடி பாதிப்புக்காக ரேபிஸ் நோய் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

நாய்க்கடியான உடனே,

1,சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு 10-15 நிமிடங்கள் கழுவவேண்டும். இது வைரசின் தாக்கத்தை குறைக்கும் முதல் முக்கியமான நடவடிக்கையாகும்.

2.உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தில் Anti-Rabies Vaccine(ARV) செலுத்தப்பட வேண்டும். கடியின் ஆழத்தை பொறுத்து, RIG(Rabies Immunoglobulin)-வும் சில நேரங்களில் தேவைப்படும்.முதல் ஊசி 24-48 மணி நேரத்தில் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும். தொடர்ந்து, மருத்துவர் பரிந்துரைக்கும் 4-5 டோஸ்கள் முழுமையாக செலுத்தப்பட வேண்டும்.


தெரு நாயாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் உள்ள செல்ல பிராணியாக இருந்தாலும் கடிக்கப்பட்டால் கூட உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தொற்று நோய் நிபுண மருத்துவர் சுரேந்தர்,

ரேபிஸ் தொற்று வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு. இவை பொதுவாக நாய், பூனை, நரி, வௌவால் போன்றவற்றிற்கு ஏற்படும் நோய் தொற்று.

இந்த மிருகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இந்த ரேபிஸ் நோய் தொற்று பரவுகிறது. அவை மனிதர்களை கடிப்பதன் மூலம் இந்த ரேபிஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

பொதுவாக ரேபிஸ் நோய் தொற்று நாய்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக வீட்டில் வளர்க்கும் நாய்களாக இருந்தால் அதை வளர்ப்பவர்களுக்கு நாயின் செயல்பாட்டில் தென்படும் மாற்றங்கள் அவற்றை கண்டுபிடிக்க உதவும்.

அதேபோல் தெரு நாய்களாக இருந்தாலும் நாய்களின் இயல்பை விட மாறுதலாக செயல்படும் வித்தியாசமாக குரைக்கும், அதிக எச்சில் வடிக்கும், பொதுவாக நாய்கள் அவற்றை தொந்தரவு செய்தால் தான் கடிக்கும் ஆனால் ரைபிள் தொற்று இருந்தால் சாதாரணமாக சாலையில் செல்பவர்களை கூட அதிகம் கடிக்கும் வழக்கம் இருக்கும் இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

சில நேரங்களில் இயல்பை விட மிகவும் சோர்வாக அமைதியாக இருப்பது அல்லது அதிக ஆக்ரோஷமாக நடந்து கொள்வது உள்ளிட்டவை மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

இதுபோல் ரேபிஸ் தொற்று பாதித்த மிருகங்கள் அருகில் இருந்து நாம் விலகி இருப்பது அவசியம்.

முதலில் நாய் கடி ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் உடனடியாக குழாய் நீரில் வேகமாக ஒரு 15 நிமிடம் வரை சோப் கொண்டு கடிப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பின் முடிந்த வரை விரைவாக மருத்துவரை பார்க்க வேண்டும் அவர் கடிப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின் முதலில் டிடி ஊசி போடுவார். அதைத் தொடர்ந்து ரேபஸ் தடுப்பூசியும் போடுவார்.

ரேபிஸ் தடுப்பூசி பொறுத்தவரை நாய் கடி பட்டுவிட்டால் எவ்வளவு விரைவாக போட்டுக் கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் இவை 4 முதல் 5 தவணைகளாக செலுத்த வேண்டி இருக்கும். ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமான ஒன்று அப்போதுதான் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஒருமுறை ரேபிஸ் தொற்று வந்துவிட்டால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்படும் ஏனென்றால் தற்போது வரை ரேபிஸ் தொற்றுக்கு மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை, அதை சரி செய்வதற்கான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் 100% இறப்பு நிச்சயம் எனவே ரேபிஸ் தொற்றை வராமல் தடுப்பது அவசியம்.

நாய்க்கடி ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகும் போது அவர் முதலில் எங்கு நாய் கடித்துள்ளது என்று ஆராய்வார், கைகளிலும், முகத்திலும் நாய் கடிபட்டால் இயல்பை விட அது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது ரேபிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ஏனென்றால் நேரடியாக அது மூளையை பாதிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

நாய் கடிபட்ட இடத்தை மருத்துவர்கள் ஆராய்ந்த பின் தடுப்பூசி மட்டும் செலுத்த வேண்டுமா அல்லது கூடுதலாக இம்யூனோகுளோபின் மருந்தும் செலுத்தப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள்.

ரேபிஸ் வைரஸ் பொருத்தவரை நாய்களின் எச்சிலில் இருக்கும் அதன் மூலம் பரவும், அந்த எச்சில் சிறு காயங்கள் வழியாகவோ, நகக் கீறல்கள் வழியாகவோ கூட மனிதர்களுக்கு பரவலாம். வௌவால்கள் கடிக்க வேண்டியது கூட இல்லை குகைகள் போன்ற இடங்களில் தான் அதிகம் இருக்கும் அவை பறக்கும் போது கண், வாய், மூக்கு வழியாக எச்சில் பரவினாலும் ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.


நாய் கடி ஏற்பட்டால் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை எல்லாம் கிடையாது அதற்கான உரிய மருத்துவ செயல்பாடுகளை செய்தால் போதும்.

கேரளாவில் இரு சிறுவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட பின்பு உயிரிழந்திருக்கிறார்கள் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நாய் கடி ஏற்பட்ட பின் தாமதமாக தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம், அல்லது 4 முதல் 5 முறை தவணை முறையில் போடப்படக்கூடிய அந்த தடுப்பூசி நேரம் தவறி போடப்பட்டிருந்தால் அதன் வீரியம் செயல்படாது.

நாய்க்கடி ஆழமாகவோ ரத்தம் வரும் அளவிற்கு இருந்தால் முகம் கைகளில் கடித்திருந்தால் கொடுக்கப்படும் இம்முனோ குளோபின் மருந்து தாமதமாக கொடுக்கப்பட்டால் அல்லது கொடுக்கப்படாமல் போனால் இது போல் ஏற்படலாம்.

நாய், பூனை போன்ற விலங்குகளை வீடுகளில் வளர்த்து வருபவர்கள் கவனத்துடன் கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தல் படி நாய்களுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டியது அவசியம்.

இது மட்டும் இன்றி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்புக்காக தொடர்ந்து விலங்குகள் அருகில் இருக்க வேண்டிய சூழல் இருப்பவர்கள், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் Pre Vaccination என்று சொல்லப்படும் முன்கூட்டியே போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு அதிகமாகி வைரஸ் தொற்று பாதிப்புக்கான வாய்ப்பு குறையலாம் என்கிறார்.

தெற்கு ஆசிய நாடுகளில் தான் இந்த ரேவுஸ் தொற்று அதிகமாக இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. ஒரு சில நாடுகள் இந்த ரேபிஸ் நோய் தொற்றை முழுமையாக தடுக்கும் செயல் முறையை செய்திருக்கின்றன.

ரேபிஸ் நோய் தொற்றுக்கான மருத்துவம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அவை பரவாமல் தடுக்க தீவிரமான உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்பட்டுள்ளது.

விரைவான ஒட்டு மொத்த முயற்சியாக அனைத்து தெரு நாய்களுக்கும் முழு வீச்சில் ரேபிஸ் தொற்று தடுப்பூசி செலுத்துவது, அதேபோல் நாய்க்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக அதற்கான மருத்துவ செயல்முறைகளை பின்பற்றி, விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வது உள்ளிட்ட செயல்முறைகள் ரேபிஸ் தொற்று அதிகம் பரவுவதை தடுக்க உதவும் என மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
1 hr 48 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved