Also Watch
Read this
By: Web Team

இந்த நவீன உலகத்தில் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் , ஓய்வில்லாத வேலைகளும் நம் தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது என்று ஆராய்சிகள் கூறுகின்றன. ஏன் முழு இருட்டில் தூங்குவது முக்கியம் என்று தெரிந்துகொள்வோம்...!
நமது உடலானது 24 மணி நேரமும் உயிரியல் கடிகாரத்தில் தான் செயல்படுகிறது, இது சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது. நமது தூக்கம் முதல் விழிப்பு நேரங்கள் ஹார்மோன் வெளியீடு மற்றும் செல் பழுது வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
ஆனால் நீங்கள் இரவில் தூங்கும்போது இரவு விளக்காக இருந்தாலும் அல்லது வெளியில் இருந்து தெரு விளக்காக இருந்தாலும் நமது மூளை இது இரவா அல்லது பகலா என்று குழப்பமடைகிறதால், இது தூக்கத்தைப் பாதிக்கிறது மேலும் உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்க்குலைக்படுவதாக கூறப்படுகிறது.
இரவில் வெளிச்சத்தில் தூங்குபவர்கள் அல்லது ஷிப்ட் வேலை செய்பவர்களின் உடலில் மெலடோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. இதனால் புற்றுநோய்க்கு எதிராக உடலில் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுதுவதாக கூறப்படுகிறது.
தூக்க ஹார்மோன் என்று அழைக்கப்படும் மெலடோனின் என்பது நமது உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் . இது இருட்டில் தான் இயற்கையாகவே உடலால் உற்பத்தி செய்யப்படும் இது ஆழ்ந்த தூக்கத்திற்கு செயல்படுவது மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் உங்கள் டிஎன்ஏவில் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகிக்கும்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மெலடோனின் ஆனது மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.
நீங்கள் பகலில் தூங்கினாலும் ஒரு இருட்டு அறையில் தூங்குங்கள், இதுபோன்று இருட்டு அறையில் தூங்குவதால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்,மன அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் மேலும் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகிறது.
இருட்டில் தூங்கும்போது மெலடோனின் ஹார்மோன் சரியான அளவில் சுரக்கும். மேலும் மனம் வேறு எண்ணங்களில் சிதறாமல் தூக்கத்தில் கவனம் செலுத்துகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved