news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காந்தாரா படத்தில் இவ்ளோ பெரிய ஓட்டையா?
tv

Also Watch

tv

Read this

காந்தாரா படத்தில் இவ்ளோ பெரிய ஓட்டையா?

பெரிய ஓட்டையா

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanthara chapter 1 water

கன்னட திரைப் படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 'காந்தாரா சாப்டர் 1' கடந்த 2ம் தேதி வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
'காந்தாரா சாப்டர் 1' படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ.509.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்ம கலாஷா... பாடலின் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் காட்சியில், 3 நிமிடம் 6ஆவது நொடியில் தண்ணீர் கேன் இடம் பெறுவதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்து வைரலாக்கியுள்ளனர். இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? எனக் கேலி செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 32 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved