Also Watch
Read this
By: Web Team

வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் சிம்பு இளைமையான தோற்றத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தனது உருவ மாற்றத்தாலும், புதிய கதாபாத்திரத்திற்காக எடுத்துக் கொள்ளும் அர்ப்பணிப்பாலும் மீண்டும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வடசென்னையை தழுவிய படம் என்பதால் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் சிம்பு உடல் எடையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved