Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து ரசிகர்கள் பரிசாக வழங்கினர். அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved