Also Watch
Read this
By: Admin News Tamil

Habeebi: நெல்லையை சேர்ந்த நெசவு தொழில் செய்யும் இஸ்லாமிய குடும்ப பின்னணி வாழ்க்கையும், அவர்களின் காதல் கதையையும் பேசி இருக்கும் படம் ஹபீபி. இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களை கண்முன் காட்டியுள்ளாதாக ஹபீபி படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்துள்ளன.
மீரா கதிரவன் இயக்கி இருக்கும் ஹபீபி படத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அருள்குமார் என பலர் முக்கிய கேரக்டர்களில் நடிச்சு இருக்காங்க. இந்த நிலையில் ஹபீபி படத்தை பார்த்த நடிகர் தனுஷ், தனது அப்பாவின் நடிப்பை புகழ்ந்து பேசி இருக்காரு.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வேலை பிசியாக ஹபீபி படத்தை தாமதமாக பார்த்ததாகவும், படத்தில் யூசுஃபாக வாழ்ந்துள்ள தன் தந்தை உட்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதால் வாழ்த்துகள் என படக்குழுவை பாராட்டி இருக்கறது படக்குழுவுக்கு பூஸ்டாக இருக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved