news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews குருவி பட பாணியில் குளிக்க சென்ற பெண்ணை ஏமாற்றிய காதலன்
tv

Also Watch

tv

Read this

குருவி பட பாணியில் குளிக்க சென்ற பெண்ணை ஏமாற்றிய காதலன்

விவாகரத்து பெண்ணுக்கு ஷாக்

4

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project(1)

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு காதலனை நம்பி வந்த விவாகரத்தான பெண்ணை குருவி பட பாணியில் ஏமாற்றி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.

தெலங்கானாவை சேர்ந்த சுதா என்ற பெண் ஃபேஷன் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வரபிரசாத் என்பவருடன் திருமணமான நிலையில் குழந்தை இல்லாததால், கடந்த 2020ம் ஆண்டு கணவரை விவாகரத்து செஞ்சி இருக்காங்க. அதன்பிறகு மறுமணம் செய்து கொள்ள நினைத்த சுதா, தனியார் திருமண தகவல் மையத்தில் வரன் தேடி இருக்காங்க.

அப்போதுதான் சுதாவுக்கு ஆந்திராவின் சித்தூரை சேர்ந்த சிவராமன் அறிமுகமாகி இருக்கான். இருவரும் பேசி பழகி காதலர்களாக வலம் வந்து இருக்காங்க. இந்த நிலையில, சிவராமனை பார்க்க சென்னைக்கு வந்த சுதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்து இருக்கு.

சென்னை வந்த சுதாவை அழைச்சிட்டு வந்து கோயம்பேடு பகுதியில் உள்ள விடுதியில் அறைஎடுத்து தங்க வைத்த சிவராமன், கோவளம் அருகே இருக்கும் திருவிடந்த நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சுதாவை வாடகை காரில் அழைச்சிட்டு போயிருக்கான். கோயிலுக்குள் நகை அணிந்து செல்ல கூடாது என கூறிய சிவராமன், சுதா அணிந்திருந்த வளையல், செயின் என மொத்தமாக 7 சவரன் நகையை வாங்கி வைத்துள்ளான்.

பின்னர் இருவரும் மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தெலங்கானா புறப்பட்ட சுதா குளிப்பதற்காக பாத்ரூம்க்குள் சென்று இருக்காங்க. அதுக்குள்ள டிக்கெட் எடுத்து வருவதாக நகையுடன் புறப்பட்ட சிவராமன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பதறிய சுதா, கோயம்பேடு காவல்நிலையத்தில் சிவராமன் மீது புகார் அளிச்சு இருக்காங்க. சினிமா பட பாணியில் சுதா குளிக்க போன நேரத்தில் நகையை திருடி சென்ற சிவராமனை போலீசார் தேடி வறாங்க.

Related Link
சிக்னலின் பச்சை விளக்கில் சட்டை, ரயிலை நிறுத்தி வழிப்பறி

சிக்னலின் பச்சை விளக்கில் சட்டை, ரயிலை நிறுத்தி வழிப்பறி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என் அப்பாவா இது! - ஹபீபி படத்தை பார்த்த தனுஷின் Review

3
1 hr 11 mins agoshare
New Project(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved