news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு
tv

Also Watch

tv

Read this

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு

குஜராத் துறைமுகத்துக்கு வந்தடைந்த திஷா கப்பல்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இன்று முதல் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 107 நாள் மோதலை முடிவுக்குக் வர, 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' அமெரிக்காவும் - ஈரானும் மின்னணு முறையில் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் பெருமிதம்
அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கையெழுத்தாகி உள்ளதாகவும், இது ஈரானிய மக்களின் மன உறுதி, அரசியல் பகுத்தறிவு, பொறுப்பான ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷஷ்கியான் பெருமிதம் தெரிவித்துள்ளார். எந்தவொரு மிரட்டலுக்கோ, அழுத்தத்திற்கோ ஒருபோதும் ஈரான் விட்டுக் கொடுக்கவில்லை என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷஷ்கியான் கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 4 மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர, டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டு உள்ளனர். இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கென்ஸ்டாக்கில் அதிகாரப்பூர்வமாக நேரில் கையெழுத்தாகிறது.

குஜராத் துறைமுகத்துக்கு வந்தடைந்த திஷா கப்பல்
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து முதல் இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்து குஜராத்தை வந்தடைந்தது. அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் அரசு மூடிய நிலையில், பல நாட்டு கப்பல்கள் சிக்கி இருந்தன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்த நிலையில், 3 மாதங்களாக சிக்கியிருந்த இந்தியாவின் திஷா எல்என்ஜி கப்பல் குஜராத்தின் Dahej துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

Related Link
குரங்கில் இருந்து வந்தவன் அல்ல மனிதன், நவீன உயிரியல் தரும் அதிர்ச்சி விவரம்

குரங்கில் இருந்து வந்தவன் அல்ல மனிதன், நவீன உயிரியல் தரும் அதிர்ச்சி விவரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என் அப்பாவா இது! - ஹபீபி படத்தை பார்த்த தனுஷின் Review

3
3 mins agoshare
New Project(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved