Also Watch
Read this
By: Web Team

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் வேலை செய்த 167 காவலர்களை பணியிட மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக இட மாறுதல் குறித்து சம்பந்தப்பட்ட காவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டு வந்த நிலையில்,
இம்முறை எந்த வித கருத்தும் கேட்காமல் காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பெண் காவலர்கள், 50 வயதை கடந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தொலை தூரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved