Also Watch
Read this
By: Web Team

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி முருகன் கோவிலில் நுழைந்த இரண்டு யானைகள் உணவு தேடி அன்னதான கூடத்தை சேதப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி இடம் பெயர்ந்த யானைகள் மலை கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தாண்டிக்குடி பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த முருகன் கோவிலுக்குள் புகுந்த யானைகள் அன்னதான கூடத்தை முழுவதும் சேதப்படுத்திய நிலையில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved