Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 02:10 PM
By: Fyrose Banu

மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் தேக்கம்பட்டி ஊராட்சி பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
புதிய தடுப்பணை கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் தார்சாலை,காங்கீரிட் சாலை, பூங்கா பராமரிப்பு போன்ற பணிகளுக்கு ஒரு கோடி 36 லட்சமும் அதே போல் தேக்கம்பட்டி ஊராட்சி நஞ்சேகவுன்டன்புதூரில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகளை தொடங்க பூமி பூஜை நடைபெற்றது.
பணிகளை தொடங்கி வைத்த ஆ.ராசா எம்.பி
நகராட்சி அலுவலகம் மற்றும் தேக்கம்பட்டி ஆகிய இருவேறு இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட்ட எம்.பி
மேலும் தேக்கம்பட்டி ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நஞ்சேகவுன்டன்புதூர் பகுதியில் உள்ள மழை நீர் தடுப்பணை உடைந்து சேதமடைந்த தண்ணீர் வெளியேறுவதை பார்வையிட்ட ஆ.ராசா விரைந்து பணிகளை மேற்கொண்டு முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved