Also Watch
Read this
By: Manigandan Raja

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் வேலை பார்த்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர்களை மீட்டு மீண்டும் கல்வி பாதையில் இணைத்த சிங்கப்பெண் மற்றும் நிமிர் குழுவினர். இந்த அதிரடி செயலால் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் சிங்கபெண் குழுவினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் உள்ள பள்ளியில் மூன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து சில நாட்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூன்று பீகார் மாநிலத்தை சேர்த்த மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சிங்க பெண் போலீசார் உடனடியாக அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமிகள் வேலைக்கு சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பணிபுரியும் பாட்டில் கழுவும் நிறுவனத்திற்கு சென்று சிங்கப் பெண் போலீசார் ஆய்வு செய்தனர்.
அங்கு ஏற்கனவே பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த சிறுமியுடன் மேலும் 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் வேலை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் மூன்று சிறுமிகளையும் அவர்கள் தாயாரிடம் அழைத்து வந்து பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 6,7,8 ஆம் வகுப்புகளில் மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பை தொடர வழி செய்தனர்.சிங்கப்பெண் போலீசார் இத்தகைய அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.