news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமை வகித்தார், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பால சரஸ்வதி, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தமிழக முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து இருந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்றவுடன் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்தார், தொடர்ந்து விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதற்காக 75 ஆயிரம் ரூபாயை தள்ளுபடியாக அறிவித்தார் இது முற்றிலும் போதாது. பருவம் தவறி
பெய்த மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளோம்.

எனவே தமிழக முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகனச் சந்திரன், விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததை தொடர்ந்து, சமாதானம் அடைந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய விவசாயிகள்.

ஜூன் 12 குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், மோட்டார் பம்பு செட்டுகள் வைத்துள்ள விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும், குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகத்திலிருந்து பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Link
எஞ்சிய அமோனியா வாயுவை வெளியேற்ற நடவடிக்கை

எஞ்சிய அமோனியா வாயுவை வெளியேற்ற நடவடிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லோகேஷ் படத்தின் சூப்பர் அப்டேட்

0
13 mins agoshare
Cini snacks








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau