news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews We are the leader அமைப்பின் சார்பில் வரும் 12-ம் தேதி மாநாடு
tv

Also Watch

tv

Read this

We are the leader அமைப்பின் சார்பில் வரும் 12-ம் தேதி மாநாடு

We are the leader

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
WE THE LEADER

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தொடங்கியுள்ள வி தீ லீடர் பவுண்டேஷன் இயக்கத்தை தொடங்கியுள்ளார் இதில் தமிழகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் மேலும் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பொள்ளாச்சியில் முதல் முறையாக We are the leaders பவுண்டேஷன் இயக்கம் சார்பில் போதை இல்லா பொள்ளாச்சி என்ற விழிப்புணர்வு மாநாடு ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக கோவை பொள்ளாச்சி சாலையில் ஆச்சி பெட்டியில் அமைந்துள்ள மைதானத்தில் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

இன்று மாநாட்டு பந்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பூமி பூஜை நடைபெற்றது முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

செய்தியாளர்களுக்கு வசந்த ராஜன் அளித்த பேட்டியின் போது : 

சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அது அதிகாரத்தில் இருந்து மட்டும் இல்லாமல் அந்த மாற்றம் சாமானிய மக்களோடு இணைந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அண்ணாமலை அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார் அந்த வகையில் சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது போதை தான் பள்ளி கல்லூரி கல்லூரி மாணவர்களில் இருந்து அனைத்து சமுதாய மக்களிடையே போதை
கலாச்சாரம் புரையோடிக் கொண்டுள்ளது.

போதைப் பழக்கம் தான் சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் அனைத்திற்கும் இந்த போதை தான் காரணமாக உள்ளது அரசு மற்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது
அனைவரும் சேர்ந்து சமுதாயமாக மாறினால் தான்மாற்றத்தை கொண்டு வந்தால் தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நோக்கில் ஜூலை மாதம் முழுவதும் போதைக்கு எதிர்ப்பான போராட்டங்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இது ஒரு பகுதியாக போதை இல்லாத பொள்ளாச்சியாக உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாநாடு நடைபெற உள்ளது லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை உரையாற்றுகிறார் இதில் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு போதை இல்லா தமிழகம் உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் இது மாநாடு மட்டுமல்ல சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மாநாடாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் வந்து செல்பவர்கள் மனதில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

Related Link
பட்டுக்கோட்டை அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது அவதூறு

பட்டுக்கோட்டை அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது அவதூறு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

0
20 mins agoshare
விவசாயிகள் போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau