news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமநாதபுரம் அருகே கஞ்சா கடத்தல் கும்பல் சிக்கியது
tv

Also Watch

tv

Read this

ராமநாதபுரம் அருகே கஞ்சா கடத்தல் கும்பல் சிக்கியது

ஏர்வாடி, ராமநாதபுரம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கஞ்சா கடத்தல்

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா ,கடல்அட்டை, மஞ்சள், பீடிஇலை போன்றவை தொடர்ந்து கடத்தி செல்லப்படுவதும் அவ்வப்போது போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புது மாயாகுளம் கடற்கரை பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்ல இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்த போது இன்று அதிகாலை அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்ற மூன்று பேரை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதில் தொடர்புடைய கீழக்கரை அருகே உள்ள மாயா குளத்தை சேர்ந்த ஜெசிர், முசாரப், கருணை, முகமதுஅனஸ் ஆகிய மூன்று பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர் அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Link
ஸ்ரீ காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஸ்ரீ காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வலுக்கட்டாயமாக மகனை போலீசார் கைது செய்ததாக தாய் புகார்

0
2 mins agoshare
போலீசார் கைது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau