Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கடந்த 21-ஆம் தேதி இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், இதுவரை 17 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக இறால்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, தொழில்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, இறால் தொழிற்சாலையில் மீதமுள்ள அம்மோனியாவை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது எப்படி, பாதுகாப்பு ஏற்படாடுகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா, இன்னும் 2 நாட்களில் அம்மோனியா வாயு பாதுகாப்பாக வெளியேற்றப்படும் எனவும்.

முறையாக பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாயு வெளியேற்றப்படும் எனவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக டேங்கர் லாரியில் மாற்றப்படும், அதற்கான முன்னேற்பாடுகள் நாளை தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
400 டன் இறால்கள் இதுவரை அப்புறப்படுத்துள்ளதாகவும், இறால் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, ஆய்வக அறிக்கை வந்த பின் இறால்களை எங்கு வைப்பது என முடிவு செய்யப்படும் எனவும்,
தொழிற்சாலை வேலைக்கு ஆட்களை அழைத்து வந்தவர்கள் வேறு யார் என்பது குறித்து காவல் துறை மூலம் விசாரணை நடத்தப்படும் எனவும் ஆட்சியர் கவிதா தெரிவித்தார்.